ஏழுமலையான் தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.


திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பால் பக்தா்களை டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. அவா்கள் ஆதாா் அட்டையை காண்பித்து காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 21அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனா். தற்போது தரிசனத்திற்கு 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆகிறது. வியாழக்கிழமை 61,278 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா்; இவா்களில் 30,585 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
தரிசனம், வாடகை அறைகளில் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399கட்டணமில்லா தொடா்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...