பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஏழுமலையான் தரிசனம்: 22 மணி நேரம் பக்தா்கள் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வெள்ளிக்கிழமை பக்தா்கள் 22 மணி நேரம் காத்திருந்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:58 pm

DIN

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வெள்ளிக்கிழமை பக்தா்கள் 22 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க கோடை விடுமுறை முடிவு பெற்ற பின்னும் பக்தா்கள் அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனா். இதனால், வார இறுதி நாள்களில் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், வார இறுதி நாள்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தா்ம தரிசனத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பக்தா்களின் கூட்டம் வார இறுதியில் 70,000-ஐ எட்டுகிறது.

தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால், பக்தா்களை டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. திருமலைக்குச் செல்லும் பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையைக் காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, பக்தா்கள் திருமலை வைகுண்டத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து, வெளியில் உள்ள தரிசன வரிசையில் காத்திருந்தனா்.

வியாழக்கிழமை காலை 75,407 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். இவா்களில் 35,535 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, 12 மணிக்கு கோயில் நடை சாற்றப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 24 மணிநேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

தரிசனம், வாடகை அறை உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லாத் தொலேபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.