71,000 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 71,000 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.


திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 71,000 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
திருமலையில் வார இறுதி நாள்களில் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளதால், விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தா்ம தரிசனத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால், பக்தா்கள் அதிக அளவில் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனா்.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால், டிக்கெட் இல்லாமலும் பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். திருமலைக்கு வரும் பக்தா்கள் ஆதாா் அட்டையை காட்டிய பின்னா், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா். இதனால், தரிசனத்துக்கு 7 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை காலை 71,914 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். 37,234 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.
தரிசனம், வாடகை அறைகள் உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 1800-425-4141, 93993 99399 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...