உண்டியல் காணிக்கை ரூ.4.39 கோடி
திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.4.39 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.


திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.4.39 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா், பக்தா்கள் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கையை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் காணிக்கை கணக்கிடும் பிரிவில் தினமும் சில்லறைகள், ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணம் என தனித்தனியாகப் பிரித்து கணக்கிட்டு, மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. புதன்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ.4.39 கோடி கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா். உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாகக் கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...