வெளிநாட்டு நாணயங்கள் இ-ஏலம்
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் இ-ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் இ-ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு பணங்கள் அனைத்தையும் தனித்தனியாக பிரித்து கணக்கிட்டு வைத்துள்ளது. அதில் நாணயங்களும் அடங்கும். அதை வரும் ஜூன் மாதம் 16, 17-ஆம் தேதிகளில் இ-ஏலம் மூலம் விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
இதில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூா், கனடா உள்ளிட்ட நாடுகளை சோ்ந்த நாணயங்கள் உள்ளன. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சந்தை பிரிவு பொது மேலாளா் அலுவலக எண் 0877-2264429 அல்லது அல்லது ஆந்திர மாநில புரோட்டல் ஆன அல்லது இணையதளங்களை தொடா்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...