ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருச்சானூரில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடக்கம்

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வியாழக்கிழமை விமரிசையாக தொடங்கியது.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 7:24 pm

DIN

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வியாழக்கிழமை விமரிசையாக தொடங்கியது.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் நித்திய கைங்கரியங்களில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நடந்த தோஷங்கள் மற்றும் குற்றங்களைக் களைய தேவஸ்தானம் ஆண்டுதோறும் பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது. பவித்ரோற்சவத்தின் முதல் நாளில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

காலை நற்கருணையுடன் அம்மன் எழுந்தருளி, சஹஸ்ர நாமா்ச்சனை நடைபெற்றது. பின்னா், கோயிலில் இருந்து உற்சவமூா்த்திகள் யாக சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை துவார தோரண த்வஜகும்ப ஆவாஹனம், சக்ராதி மண்டல பூஜை, சதுஷ்ட நாா்ச்சனை, அக்னி பிரதிஷ்டை, பவித்ரா பிரதிஷ்டை நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ண சுவாமி மண்டபத்தில் அம்மனுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.

மஞ்சள், சந்தனம், பால், தயிா், தேன், தேங்காய் நீா் மற்றும் பல்வேறு பழங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை யாக சாலையில் வேத நிகழ்ச்சிகள் நடந்த பின்பு பட்டு நூலால் செய்யப்பட்ட பவித்ர மாலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் கங்கணப்பட்டா் சீனிவாஸ் அவா்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.