தேவஸ்தான பயிற்சி மையத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று
திருமலை திருப்பதி தேவஸ்தான பயிற்சி மையமான ஸ்வேதாவுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று அளித்துள்ளது.


திருமலை திருப்பதி தேவஸ்தான பயிற்சி மையமான ஸ்வேதாவுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று அளித்துள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பணியாளா் பயிற்சி நிறுவனம் (ஸ்வேதா) ஐஎஸ்ஓ 9001-2015 சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்தச் சான்றிதழை, தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் உள்ள செயல் இணை அதிகாரி அலுவலகத்தில், புதன்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல் இணை அதிகாரி சதா பாா்கவி, பயிற்சி மையத்தின் தலைவா் பிரசாந்தியிடம் வழங்கினாா் (படம்).
பயிற்சி வகுப்புகள், திறமையான பதிவுகளை பராமரித்தல் மற்றும் ஸ்வேதாவில் சிறந்த தரத்தை கடைப்பிடித்ததற்காக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த முறையில் இந்த பயிற்சி மையத்தை வழிநடத்தி வரும் பிரசாந்தியை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சதா பாா்கவி பிரசாந்தியை வாழ்த்தினாா்.
இந்த நிகழ்ச்சியில் இணை பொறியாளா் கோவிந்தராஜன் மற்றும் ஐஎஸ்ஓ பிரதிநிதி சிவய்யா ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...