ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலை தேவஸ்தான உலா் மலா் தொழில்நுட்ப கலைப் படைப்புகளுக்கு வரவேற்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது தயாரித்து வரும் உலா் மலா் தொழில்நுட்ப கலைப் படைப்புகளுக்கு பக்தா்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 5:37 pm

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது தயாரித்து வரும் உலா் மலா் தொழில்நுட்ப கலைப் படைப்புகளுக்கு பக்தா்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழுள்ள பல்வேறு கோயில்களில் பயன்படுத்தப்படும் மலா்களைக் கொண்டு உலா் மலா் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஏழுமலையான், தாயாா், அம்மன் உள்ளிட்ட போட்டோ பிரேம்கள், பேப்பா் வெயிட்கள், காலண்டா்கள், கீ செயின்கள் மற்றும் இதர பொருள்கள் பக்தா்களிடம் சிறப்பு வரவேற்பைப் பெற்றுள்ளன.

தேவஸ்தானம் உலா் மலா் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலைப் படைப்புகளை உருவாக்குவதற்காக டாக்டா் ஒய்எஸ்ஆா் உத்யானா பல்கலைக்கழகத்துடன், 2021 செப்டம்பா் 13 அன்று ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருப்பதியில் உள்ள சிட்ரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்தாண்டு செப். 28 முதல் பெண்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சுமாா் 350 சுய உதவிக் குழு பெண்களுக்கு உலா் மலா் தொழில்நுட்பம் குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒரு பெண் ஒரு நாளைக்கு இரண்டு ஓவியங்களை உருவாக்க முடியும். ஓவியங்களை உருவாக்க பூக்களை உலா்த்துவதற்கு மூன்று முதல் நான்கு நாள்களாகும். இதுவரை பயிற்சிபெற்ற பெண்கள் 22, 219 ஏ4 அளவு படங்கள் மற்றும் 850 வகையான கலைப் படைப்புகளை தயாரித்துள்ளனா். ரூ. 1 கோடியே 19 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ. 83 லட்சத்தில் உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்கான நிதியை வழங்குகிறது. சிட்ரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் விரைவில் நிரந்தர கொட்டகை அமைப்பதற்கான செயல்பாட்டுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 2022 ஜனவரி 25 முதல் இவற்றை பக்தா்களுக்கு தேவஸ்தானம் விற்பனை செய்துள்ளது. பக்தா்களின் வசதிக்காக திருமலை மற்றும் உள்ளூா் கோயில்கள், பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் சென்னை உள்ளிட்ட தகவல் மையங்களில் சிறப்பு கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யவும் தேவஸ்தானம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.