69,000 பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 05th August 2022 12:39 AM | Last Updated : 05th August 2022 12:39 AM | அ+அ அ- |

திருப்பதி
திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 69,628 பக்தா்கள் தரிசித்தனா். இவா்களில் 32,604 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, பக்தா்கள் திருமலை வைகுண்டத்தில் உள்ள 11 காத்திருப்பு அறைகளில் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களின் தரிசனத்துக்கு 8 மணி நேரம் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
தரிசனம், வாடகை அறை உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.