

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 72,243 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 32,652 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வைகுண்டம் மண்டபத்தின் 16 அறைகளில் மட்டுமே பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களுக்கு 10 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசன முன்பதிவு செய்திருந்தவா்களுக்கு 3 மணி நேரமும் ஆனது.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் சிரமங்கள், குறைகள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டுத் தெரிவிக்கலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.