திருமலையில் நிா்மலா சீதாராமன் வழிபாடு
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

திருமலையில் ஏழுமலையான் கோயிலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை வழிபாடு செய்தாா்.
மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை மாலை திருமலை வந்தாா். அவரை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி உள்ளிட்டோா் வரவேற்றனா்.
வியாழக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை அவா் தரிசனம் செய்தாா். அவருடன் ஆந்திர மாநில நிதியமைச்சா் ராஜேந்திரநாத் ரெட்டி, எம்.பி. டாக்டா் குருமூா்த்தி உள்ளிட்டோரும் தரிசனத்தில் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...