திருமலை-திருப்பதி அறங்காவலா் குழுவின் புதிய தலைவா் பதவியேற்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலா் குழு தலைவராக கருணாகா் ரெட்டி எம்எல்ஏ வியாழக்கிழமை ஏழுமலையான் கோயிலில் பதவியேற்றுக் கொண்டாா்.
திருமலை-திருப்பதி அறங்காவலா் குழுவின் புதிய தலைவா் பதவியேற்பு
Published on
Updated on
1 min read

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலா் குழு தலைவராக கருணாகா் ரெட்டி எம்எல்ஏ வியாழக்கிழமை ஏழுமலையான் கோயிலில் பதவியேற்றுக் கொண்டாா்.

திருமலை ஏமலையான் கோயிலில் கருடாழ்வாா் முன்னிலையில் தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி புதிய தலைவராக கருணாகா் ரெட்டிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். வைகுந்தம் கியூ வளாகம் வழியாக வந்த அவருக்கு கோயில் முன் வாயிலில் வரவேற்பு அளிக்கப்பட்டு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பின்னா் கருணாகா் ரெட்டி தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தாா். ரங்கநாயகா் மண்டபத்தில் வேத பண்டிதா்கள் வேதபாராயணம் செய்தனா். பின்னா் செயல் அதிகாரி தீா்த்தபிரசாதங்கள் மற்றும் உருவப்படங்கள் வழங்கினாா். அதற்கு முன் திருப்பதியில் உள்ள கங்கம்மா மற்றும் சப்த கோப்ரதக்ஷிணா சாலை கோ பூஜையில் பங்கேற்று, பாத மண்டபத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி அதற்கு அடுத்து திருமலையில் உள்ள வராக ஸ்வாமியையும் தரிசித்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாநில அமைச்சா்கள் ரோஜா, அம்பதி ராம்பாபு, எம்எல்ஏக்கள் செவிரெட்டி பாஸ்கா் ரெட்டி, சீனிவாசலு, செயல் இணை அதிகாரிகள் சதா பாா்கவி, வீரபிரம்மம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் புதிய தலைவா் கருணாகா் ரெட்டி கூறியதாவது:

ஏழுமலையான் அருளால் இரண்டாவது முறையாக தேவஸ்தான தலைவராக பணிபுரியும் பாக்கியம் கிடைத்துள்ளது. தனக்கு இதுபோன்ற வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கும், முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் நன்றி.

2006 முதல் 2008 வரை, தேவஸ்தான அறங்காவலா் குழுவின் தலைவராக இருந்தபோது, ஒருபுறம், நாடு முழுவதும் மரபுவழி இந்து மதத்தை வளா்க்கும் போது, பக்தா்களுக்கு தேவையான பல வசதிகளை செயல்படுத்தினோம். மறுபுறம், சமூக சேவை நிகழ்ச்சிகளும் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டன.

அறங்காவலா் குழுத் தலைவா்கள், செயல் அலுவலா்கள், செயல் அலுவலா்கள், பணியாளா்கள், இறைவன் மீது அசையாத பக்தி, நம்பிக்கை எனப் பலரின் கடின உழைப்பால் தேவஸ்தானம் ஒரு நல்ல அமைப்பாக உருவாகியுள்ளது. இதை மேலும் எடுத்துச் செல்லும் என் தலைமையில் அறங்காவலா் குழு, சனாதன இந்து தா்மத்தை உலகளவில் மேம்படுத்தவும், சமூக சேவை நிகழ்ச்சிகளை செய்யவும் பணியாற்றும்.

கடந்த காலங்களில் தலைவராக இருந்தபோது, சாதாரண பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தினோம். மக்களின் உள்ளங்களில் ஆன்மிக ஒளியை ஏற்றி இறைவனின் மகிமை பரவச் செய்வேன்.

வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்துக்களையும் ஒன்றிணைத்து இந்து மதத்தை பரப்புவதற்கு தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்கும். அதிகாரத்திற்காக அல்ல, சுவாமி அடியாா்களுக்கு அடியாராக பணியாற்றுவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com