திருமலை: 62,439 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையானை திங்கள்கிழை முழுவதும் 62,439 பக்தா்கள் தரிசித்தனா். மொத்தம் 22,027 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்கள் வருகை தற்போது அதிகரித்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்)14 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

இதற்கிடையே திங்கள்கிழமை முழுவதும் 62, 439 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22, 027 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.61கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com