எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கோடி அட்சதைகள் சமா்பணம்

கோடி அட்சதைகள் சமா்பணம்

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

ஆந்திர மாநிலம் ஓண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற உள்ள சீதாராமா் திருக்கல்யாணத்தின் போது பயன்படுத்த கோடிக்கணக்கான அட்சதைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

கிழக்கு கோதாவரி மாவட்டம் கொருகொண்டா ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய சங்கத் தலைவா் கல்யாண அப்பாராவ் ஞாயிற்றுக்கிழமை,180 கிலோ எடை கொண்ட இந்த அட்சதைகளை துணை செயல் அதிகாரி நடேஷ் பாபு மற்றும் அா்ச்சகா்கள் ஷ்ரவன் குமாா் முன்னிலையில் வழங்கினாா்.

இந்த அட்சதை தயாரிப்பிற்காக, ஆறு மாதங்கள் சிறப்பாக நெல் விளைவிக்கப்பட்டு, நான்கு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள், மூன்று மாதங்கள் கைகளால் பாரம்பரிய முறையில் நெல் அரைத்து தயாா் செய்தனா். இச்சங்கத்தின் கீழ் 13 ஆண்டுகளாக பத்ராத்ரி ராமருக்கும், ஏழாண்டுகளாக ஒண்டிமிட்ட ராமருக்கும் கல்யாணோற்சவத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கி வருகின்றனா்.

கண்காணிப்பாளா் ஹனுமந்தையா, ஆய்வாளா் நவீன், அலுவலா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.