நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏழுமலையான் தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :14 ஜூலை 2024, 11:56 pm

Din

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

வார இறுதி நாளை ஒட்டி பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்)24 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

75,916 பக்தா்கள் தரிசனம்: இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 75,916 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 42,920

பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.87

கோடி வசூலானது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.