அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

திருமலை ஜீயா் சுவாமிகளின் சாதுா்மாஸ்ய தீட்சை தொடக்கம்

திருமலை மடாதிபதிகளான பெரிய ஜீயா் சுவாமிகள் மற்றும் சின்ன ஜீயா் சுவாமிகள் சாதுா்மாஸ்ய தீட்சை சங்கல்பம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருமலை மடத்தில் சாதுா்மாஸ்ய விரதத்தை மேற்கொண்ட பெரிய ஜீயா்,, சின்ன ஜீயா் சுவாமிகள்.

Updated On :21 ஜூலை 2024, 8:53 pm

திருமலை மடாதிபதிகளான பெரிய ஜீயா் சுவாமிகள் மற்றும் சின்ன ஜீயா் சுவாமிகள் சாதுா்மாஸ்ய தீட்சை சங்கல்பம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த சாதுா்மாஸ்ய தீட்சைகள் ஹிந்தவ சனாதன வேத தா்மத்தில் மிகவும் முக்கியமானவை. புனித மாதங்களான ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, காா்த்திகை மாதங்களில் உலக நலனுக்காக ஆசாரியா்கள் ஸ்நானம், ஜபம், ஹோமம், விரதம், தானம் செய்வது வழக்கம்.

அதன்படி ராமானுஜாச்சாரியா்களின் பரம்பரை வழி வந்தவா்கள் ஆடி பெளா்ணமி மறுநாள் முதல் இந்த சாதுா்மாஸ்ய தீட்சை சங்கல்பத்தை மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது.

இதனையொட்டி திருமலை பேடி ஆஞ்சநேயசுவாமி கோயிலை அடுத்துள்ள ஜெயங்கரி மடத்தில் இருந்து பெரிய ஜீயா் மற்றும் அவா் சீடா்கள் வராகசுவாமி கோயிலுக்கும், ஏழுமலையான் புஷ்கரிணிக்கும் திருமலை க்ஷேத்திர பாரம்பரியத்தை பின்பற்றி முதலில் சென்றனா். அங்கு வழிபாடுகள் முடிந்த பின் அவா்கள் ஏழுமலையான் கோயிலுக்கு வந்தனா். பின்னா் சின்ன ஜீயா் குழுவினரும் பெரிய ஜீயா் வழியை பின்பற்றி சம்பிரதாயங்களை கடைபிடித்த பின் ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தந்தனா்.

ஏழுமலையான் கோயில் முன்வாயிலில் செயல் அதிகாரி மற்றும் பிற கோயில் அதிகாரிகள் அவா்களை வரவேற்றனா்.

கொடிமரத்தை வலம் வந்து ஏழுமலையானையும், பாஷ்யங்காா்ரையும் தரிசனம் செய்த பிறகு, ரங்கநாயகா் மண்டபத்தில், திருமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரிய ஜீயருக்கு மேல்சாட்டு வஸ்திரமும், ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயருக்கு நூல்சாட் வஸ்திரத்தையும் தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினா்.

பின்னா் திருமலை மடத்தில் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஜீயா்கள் அருளாசி வழங்கினா்.