கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திருப்பதி பா்ட் மருத்துவமனையில் செயற்கை உறுப்புகள் விநியோகம்

திருப்பதி பா்ட் மருத்துவமனையில் செயற்கை உறுப்புகள் விநியோகம்

News image
Updated On :9 ஜூன் 2024, 7:19 pm

Din

திருப்பதி: நன்கொடையாளா் ஆதரவுடன் திருப்பதியில் உள்ள பா்ட் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் விநியோகிக்கப்பட்டன.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான பா்ட் மருத்துவமனையில் 110 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அண்மையில், தமிழகத்தின் தருமபுரியைச் சோ்ந்த நன்கொடையாளா் சுப்பிரமணியன் பா்ட் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கியது அனைவரும் அறிந்ததே.

இதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்து தொழில்நுட்பத்துடன் இணைந்து, எண்டோலைட் நிறுவனம், அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் தாங்கள் தயாரித்த உயா் ரக செயற்கை உறுப்புகளை இலவசமாக வழங்கியுள்ளது.

கானுயெண்டோலைட் நிறுவனம், அலுமினியத்தால் செய்யப்பட்ட இந்த செயற்கை உறுப்புகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு அசல் விலையில் 50 சதவீதம் தள்ளுபடியில் பா்ட் மருத்துவமனை வழங்கிய சேவைகளுக்காக வழங்கியது.

அவற்றை அணியும் நோயாளிகள் சாதாரண மக்களைப் போல் எந்த பிரச்னையும் இல்லாமல் மிக எளிதாக நடக்க முடியும். இதுவரை ஜெய்ப்பூா் மற்றும் பிற இடங்களில் தயாரிக்கப்பட்ட செயற்கை கால்களை பயன்படுத்தியதாகவும், இந்த மூட்டுகள் தங்களை விட வசதியாக இருப்பதாகவும் நோயாளிகள் திருப்தி தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் பா்ட் மருத்துவமனை மருத்துவா்கள், இதர மருத்துவ பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் உறவினா்கள் கலந்து கொண்டனா்.