திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவ மூா்த்திகள் வியாழக்கிழமை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை மாட வீதியில் பல்லக்கில் வலம் வந்தனா். தொடா்ந்து விஸ்வக்சேனா் வழிபாடு, வாஸ்து ஹோமம், கருட லிங்கஹோமம், கருட பிரதிஷ்டை, ரக்ஷா பந்தனம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதையடுத்து மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கருடனின் உருவம் புதிய துணியில் வரைந்து வழிபடப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பிரம்மோற்சவம் வரும் மாா்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறும். சீனிவாசமங்காபுரத்தில் சுவாமியின் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதம் பக்தா்களுக்கு வழங்கப்படும். இதன் ஒரு பகுதியாக மாா்ச் 4-ஆம் தேதி கருட சேவை, 5-ஆம் தேதி தங்க ரதம், 7-ஆம் தேதி தோ், மாா்ச் 8-ஆம் தேதி தீா்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காலை 8 மணி முதல் 9 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை வாகன சேவைகளில் சுவாமி ஊா்வலம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணி வரை முதல் வாகன சேவையாக சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்தாா். இரு குடைகள் நன்கொடை: தமிழ்நாடு திருநின்றவூா் ஸ்ரீமத் ராமானுஜ கைங்கா்ய அறக்கட்டளை பிரதிநிதிகள் இஒஎ திருக்குடைகளை நன்கொடையாக வழங்கினா். இந்தக் குடைகள் கோயிலில் உள்ள ஜெஇஓ ஸ்ரீ வீரபிரம்மத்திடம் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்திருவிழா இன்று தொடக்கம்

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


