

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும் அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 65,508 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 25,599 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில், ரூ. 2.97 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

