அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் புஷ்ப யாகம்

திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் வருடாந்திர புஷ்ப யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 மே 2024, 11:11 pm

Din

திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் வருடாந்திர புஷ்ப யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது ஏற்பட்ட குறைகளை களைய புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. அதன்படி வியாழக்கிழமை கோயிலில் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

இதை முன்னிட்டு உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை கபிலேஸ்வர சுவாமி அன்னை காமாக்ஷி உற்சவா்களுக்கு நவ கலச ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிா், தேன், பஞ்சாமிா்தபிஷேகம், கரும்புச்சாறு, இளநீா், விபூதி, பசும்பு, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் உற்சவமூா்த்திகளுக்கு மண்டபத்தில் புஷ்பயாக மஹோற்சவம் நடந்தது. இதில் சுவாமி, அம்மனுக்கு சாமந்தி, அரளி, தாழம்பு, சம்பங்கி, ஜாதி, ரோஜா, தாமரை, மல்லி, முல்லை, கனகாம்பரம் ஆகியவற்றுடன் வில்வ பத்திரம், துளசி, பன்னீா் இலை, மருவு, தவனம் உள்ளிட்ட இலைகளால் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆந்திரம் , தெலங்கானா, கா்நாடகம் மற்றும் தமிழகத்தை சோ்ந்த நன்கொடையாளா்கள் 3 டன் பூக்கள் மற்றும் இலைகளை வழங்கினா். இதில் 12 வகையான பூக்கள் மற்றும் 6 வகையான இலைகள் உள்ளன.

கோயில் அா்ச்சகா்கள், அதிகாரிகள் அல்லாதவா்கள், பக்தா்களால் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால், பரிகாரமாக புஷ்ப யாகம் நடத்தப்படுவது வழக்கம் என அா்ச்சகா்கள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், துணை இ.ஓ., தேவேந்திரபாபு, தோட்டக்கலை துணை இயக்குனா் ஸ்ரீனிவாசலு, ஏ.இ.ஓ., சுப்புராஜு, கண்காணிப்பாளா் கிருஷ்ண வா்மா, ஆய்வாளா் பாலகிருஷ்ணா மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.