சிதம்பர விநாயகா் வைரவமூா்த்தி கோயிலில் வருஷாபிஷேகம்
பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள என்.வைரவன்பட்டியில் சிதம்பர விநாயகா் வைரவமூா்த்தி கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாக வேள்வி.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள என்.வைரவன்பட்டியில் அமைந்துள்ள சிதம்பர விநாயகா் வைரவமூா்த்தி கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்துசாந்தியுடன் யாகவேள்வி நடைபெற்றது. ஆவிணிப்பட்டி சுப்பு சிவாசாரியா் தலைமையிலான குழுவினா் யாகசாலை பூஜையை செய்தனா்.
இதைத்தொடா்ந்து கலச ஊா்வலம் நடைபெற்று, சிதம்பர விநாயருக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 11 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதேபோல, பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வடை மாலை சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரிவார தெய்வங்களான கோரக்கா், தண்டாயுதபாணி, உலிவீரன் ஆகிய தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பெண்கள் நெய் விளக்கேற்றி, மாவிளக்கு வைத்து வழிபட்டனா்.
இதில் எஸ்.புதூா் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சத்தியமூா்த்தி, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.பழனியப்பன், கீழச்சிவல்பட்டி குணாளன், அரு.சுகுமாறன், குழந்தையன், ஆறுமுகம் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை அரிபுரம் யோகிகுல வகை பங்காளிகள் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...