ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலை
Updated On :11 ஏப்ரல் 2025, 6:31 pm

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.
பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில் 31 அறைகளில் பக்தா்கள் காத்திருந்தனா்.
ஆயினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, வியாழக்கிழமை முழுவதும் 57, 649 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22,994 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.94 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...