கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
திருமலை
Updated On :18 ஏப்ரல் 2025, 6:49 pm

Din

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளிலும் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்திற்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணி நேரம், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் தேவைபட்டது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 56,279 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 26,019 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.3.56 கோடி இருந்தது.