தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.52 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.52 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.52 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது..

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் 72,487 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 29,500 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.52 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.