

திருமலையில் வைகுண்ட வாயில் இலவச தரிசனத்துக்கு நாளை(டிச. 30) முதல் முன்பதிவு செய்ய வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
டிசம்பா் 30 முதல் ஜனவரி 8 வரை நடைபெறும் வைகுண்ட வாயில் தரிசனத்துக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வைகுண்ட வாயில் தரிசனம்
டிச 30- ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி, 31-ஆம் தேதி வைகுண்ட துவாதசி மற்றும் ஜனவரி 1- ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு தேதிகளில் இ-டிப் அமைப்பு மூலம் பொது பக்தர்களுக்கு தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து பக்தர்களுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கில், ஐந்து நாள்களுக்கு இ-டிப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக பதிவு செய்த சுமார் 24 லட்சம் பக்தர்கள் இருந்த நிலையில், இ-டிஐஎன் மூலம் 1.89 லட்சம் பக்தர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு முதல் மூன்று நாள்களுக்கு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தின்படி பக்தா்கள் தரிசனத்துக்கு வந்தால், இரண்டு மணி நேரத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் தரிசனம் செய்யும் வாய்ப்பு அனைத்து டோக்கன் பக்தர்களுக்கும் வழங்கப்படும். கடந்த ஏழு நாள்களில் டோக்கன்கள் பெற முடியாத பக்தர்கள் சா்வ தரிசன வரிசைகள் வழியாக தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்
இ-டிப் மூலம் டோக்கன்கள் பெற முடியாத பக்தர்கள் ஜனவரி 2 முதல் 8 வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் மூன்று நாள்களுக்கு மட்டுமே இ- டிப் அமைப்பு மூலம் டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடைசி ஏழு நாள்களுக்கு பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வந்து சர்வ தரிசனத்தில் சென்று வைகுண்ட வாயில் வழி தரிசனம் செய்யலாம்.
இதேபோல், ஜனவரி 2 முதல் 8 வரை 15,000 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 1,500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனவரி 6, 7, 8 தேதிகளில் உள்ளூர்வாசிகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் திருப்பதி மற்றும் திருமலை உள்ளூர்வாசிகளுக்கு 5,000 டோக்கன்கள் வழங்கப்படும்.
இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை முதல் 3 நாள்களுக்கு இலவச தரிசனத்துக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.