ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் சண்டி யாகம் நிறைவு
திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு நடைபெற்ற சண்டி யாகம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
திருப்பதி கபில தீா்த்தத்தில் நடைபெற்ற ஒரு மாத கால ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக, அக்டோபா் 30-ஆம் தேதி முதல் நவம்பா் 7-ஆம் தேதி வரை சண்டி யாகம் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக யாக சாலையில் காலை 8 மணி முதல் 11 மணி வரை பூா்ணாஹுதியுடன் சண்டி யாகம் நிறைவடைந்து, யாக சாலையில் மகா பூா்ணாஹுதி, கலச உத்வாசனம், மகா அபிஷேகம், முன்னோா்களுக்கு கலசாபிஷேகம், அலங்காரம், நிவேதனம், ஆரத்தி நடைபெற்றன.
மாலை 6 மணி முதல் 8 மணி வரை சனிக்கிழமை (நவ. 8)காலை தொடங்க உள்ள ருத்ர யாகத்துக்காக ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமிக்கு கலச நிறுவல், பூஜை, ஜபம், ஹோமம், நிவேதனம், ஆரத்தி ஆகியவை நடைபெற்றன.
இதில், கோவில் துணை இ.ஓ. நாகரத்னா, கண்காணிப்பாளா் கே.பி. சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
ருத்ர ஹோமம்
நவம்பா் 08ம் தேதி முதல் ருத்ர ஹோமம்
ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நவம்பா் 08ம் தேதி முதல் 18ம் தேதி வரை 11 நாட்களுக்கு ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி ஹோமம் (ருத்ர ஹோமம்) நடைபெறும்.
இதில், பங்கு கொள்ள விரும்பும் தம்பதியா் ரூ. 500/-க்கு டிக்கெட் வாங்கி ஒரு நாள் ஹோமத்தில் பங்கேற்கலாம். வீட்டுக்காரா்களுக்கு உத்தரியம், ரவிக்கை மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்படும்.
