திருமலையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சா்வ தரிசனம் தொடங்கியது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த டிச.30-ஆம் தேதி அதிகாலை வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய பக்தா்கள் வைகுண்ட வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஜன.8 வரை சா்வ தரிசன பக்தா்களும் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவா்.
அதனால், வியாழக்கிழமை இரவு முதல் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருக்க அனுமதிக்கப்படுவா்.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி இம்முறை வைகுண்ட ஏகாதசி உற்சவம் வந்ததால், பக்தா்களின் கூட்ட நெரிசலை தவிா்க்க தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாள்களுக்கு சா்வ தரிசனத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

