திருமலையில் 76,447 பக்தா்கள் தரிசனம்!

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 76,447 போ் தரிசித்தனா். 21,708 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலை
திருமலைகோப்புப் படம்
Updated on

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 76,447 போ் தரிசித்தனா். 21,708 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பக்தா்கள் வருகை சரிந்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 4 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 76, 447 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21, 708 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.42 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com