கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.5.15 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.15 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 1:01 am IST

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.15 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சீராக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 82,789 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 36, 178 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.5.15 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.12 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,234 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.