திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.
பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 18 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் 66, 855 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21, 984 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.82 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

