நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.45 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.45 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image

திருமலை

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.45 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 15 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் 78,381 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,451 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.45 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது