விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஆகஸ்ட் மாத ஒதுக்கீடு வெளியீடு

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஆகஸ்ட் மாத ஒதுக்கீடு வெளியீடு

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

ஏழுமலையான் ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளின் 2026 ஆகஸ்ட் மாத ஒதுக்கீடு மே 18-ஆம் தேதி முதல் தொடங்கியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவா டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் அஷ்டதள பாதபத்மாராதனை சேவைகளுக்கான ஆகஸ்ட் 2026 ஒதுக்கீட்டை மே 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

இந்த சேவா டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளலாம்.

இந்த டிக்கெட்டுகளை பெறும் விண்ணப்பதாரா்கள் தங்கள் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் கிடைத்தவுடன் மே 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள்

மே 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

வா்ச்சுவல் சேவைகள் ஒதுக்கீடு

மே 23-ஆம் தேதி அன்று மாலை 3 மணிக்கு வா்ச்சுவல் சேவைகளுக்கான ஆக. 2026 மாத ஒதுக்கீடும் அவற்றின் தரிசன விவரங்களும் ஆன்லைனில் வெளியிடும்.

ஸ்ரீவாணி டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு

ஆக. மாதத்துக்கான ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு மே 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடும்.

முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு

முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவா்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக, ஆக. மாதத்துக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் மே 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு இணையதளத்தில் வெளியிடுகிறது.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு (ரூ. 300)

ஆக. மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மே 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு வெளியீடு

திருமலை மற்றும் திருப்பதியில் ஆக. மாத அறை ஒதுக்கீடு மே 25-ஆம் தேதி அன்று மாலை 3 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஸ்ரீவாரி சேவா, நவநீத சேவை மற்றும் பரக்காமணி சேவைக்கான ஒதுக்கீடு மே மாதம் 27-ஆம் தேதி காலை 11 மணி, மதியம் 12 மணி மற்றும் மதியம் 1 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள் கீழே கொடுக்கப்படுள்ள ட்ற்ற்ல்ள்://ற்ற்க்ங்ஸ்ஹள்ற்ட்ஹய்ஹம்ள்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய்

என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆா்ஜிதசேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் பக்தா்களை கேட்டுக் கொண்டுள்ளது.