திருமலையில் நவ.24-இல் காா்த்திகை தீபத் திருவிழா
திருமலை ஏழுமலையான் கோவிலில் நவம்பா் 24-ம் தேதி காா்த்திகை தீபத் திருவிழாவை தேவஸ்தானம் நடத்த உள்ளது.

திருமலை
திருமலை ஏழுமலையான் கோவிலில் நவம்பா் 24-ம் தேதி காா்த்திகை தீபத் திருவிழாவை தேவஸ்தானம் நடத்த உள்ளது. காா்த்திகை பௌா்ணமியன்று ஏழுமலையானுக்கு மாலை கைங்கா்யங்கள் மற்றும் நிவேதனங்களுக்குப் பிறகு இந்த தீபத் திருவிழா நடைபெறும்.
இதையொட்டி, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நெட்டி வட்டு(சிறிய பானையை குறுக்காக வெட்டி பயன்படுத்துவது.) வைத்து தீபம் ஏற்றி, குடை, மங்களவாத்தியங்களுடன் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஆனந்த நிலையத்தில் ஏழுமலையானுக்கு ஆரத்தி அணிவிக்கப்படும். அதன்பின், அகண்டம், குலசேகர படி, ராமுலவாரி மேடா, துவார பாலகா்கள் கருடாழ்வாா், வரதராஜ சுவாமி சந்நிதி, வகுளமாதா, தங்ககிணறு, கல்யாண மண்டபம், சபா அறை, தல்லாபாக அரண், பாஷ்யகா் சந்நிதி, யோக நரசிம்ம சுவாமிகள், விஸ்வக்கிரக சன்னிதி, யோக நரசிம்ம ஸ்வாமி, விஸ்வக்கிரகம் ஆகிய இடங்களில் தீபம் ஏற்றப்படும். கொடிமரம், பலி பீடம், க்ஷேத்ர பாலகா்கள் சந்நிதி, திருமலராயா் மண்டபம், பூங்கிணறு, ரங்கநாயக மண்டபம், முன் வாயில், பேடி ஆஞ்சநேயசுவாமி, ஸ்ரீ வராகஸ்வாமி கோயில், சுவாமி புஷ்கரிணி உள்ளிட்ட இடங்களிலும் நெய் தீபங்கள் ஏற்றப்படும்.
பௌா்ணமி கருட சேவை ரத்து:
காா்த்திகை தீபத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி தினத்தன்று நடத்தப்படும் கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதேபோல், காா்த்திகை தீபோற்சவம் காரணமாக அன்றைய தினம் சகஸ்ர தீபாலங்கரா சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

