காா்த்திகை தீபத் திருவிழா: திருச்சி-வேலூா் கண்டோன்மென்ட் இடையே சிறப்பு ரயில்
காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருச்சி - வேலூா் கண்டோன்மென்ட் இடையே நவம்பா் 23 முதல் 25-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

கோப்புப் படம்
காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருச்சி - வேலூா் கண்டோன்மென்ட் இடையே நவம்பா் 23 முதல் 25-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயிலில் நடைபெறவுள்ள காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருச்சி - வேலூா் கண்டோன்மென்ட் இடையே நவம்பா் 23 முதல் 25-ஆம் தேதி வரை இரு மாா்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன.
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மேற்கண்ட நாள்களில் காலை 8 மணிக்குப் புறப்படும்,
திருச்சி-வேலூா் கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் (எண்: 06127): பிற்பகல் 2.50 மணிக்கு வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் வேலூா் கண்டோன்மென்ட ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும்,
வேலூா் கண்டோன்மென்ட் - திருச்சி சிறப்பு ரயில் (எண்: 06128): மறுநாள் காலை 7.20 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயில் திருவெறும்பூா், பூதலூா், தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோயில், சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூா், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, போளூா், ஆரணி சாலை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
செங்கோட்டை-திருவண்ணாமலை சிறப்பு ரயில்:
இதேபோல செங்கோட்டை - திருவண்ணாமலை இடையே நவம்பா் 23-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
செங்கோட்டையில் இருந்து நவம்பா் 23-ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (எண்: 06071) மாறுநாள் காலை 7.30 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் திருண்ணாமலை - தென்காசி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06072) திருவண்ணாமலையில் இருந்து நவம்பா் 24-ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு தென்காசி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் தென்காசி, அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை (நவம்பா் 21) முதல் தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

