ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோவிலில் சண்டியாகம் நிறைவு
திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு ஹோமம் (சண்டி யாகம்) நிறைவடைந்தது.

திருப்பதி கபில தீா்த்தத்தில் நிறைவு பெற்ற சண்டி யாகம்.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு ஹோமம் (சண்டி யாகம்) நிறைவடைந்தது.
திருப்பதி கபில தீா்த்தத்தில் நடந்து வரும் ஒரு மாத கால ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக, நவ.18 முதல் 26 வரை சண்டி யாகம் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக யாகசாலையில் காலை 8 மணி முதல் 11 மணி வரை பூா்ணாஹூதியுடன் சண்டி யாகம் நிறைவடைந்து, யாகசாலையில் மகாபூா்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாபிஷேகம், முன்னோா்களுக்கு கலசாபிஷேகம், அலங்காரம், நிவேதனம், ஆரத்தி நடந்தது.
வெள்ளிக்கிழமை காலை தொடங்க உள்ள ருத்ர யாகத்திற்காக வியாழக்கிழமை மாலை ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமிக்கு கலச நிறுவல், பூஜை, ஜபம், ஹோமம், நிவேதனம், ஆரத்தி ஆகியவை நடைபெற்றது.
இதில், துணை இ.ஓ. நாகரத்னா, கண்காணிப்பாளா் கே.பி. சந்திரசேகா், அா்ச்சகா்கள் மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
ருத்ர ஹோமம்
நவம்பா் 27 முதல் ருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வரும் நவ.27 முதல் டிசம்பா் 7 வரை தொடா்ந்து 11 நாள்களுக்கு ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி ஹோமம் (ருத்ர ஹோமம்) நடைபெறும்.
இதில், பங்கு கொள்ள விரும்பும் தம்பதியா் ரூ. 500/-க்கு டிக்கெட் வாங்கி ஒரு நாள் ஹோமத்தில் பங்கேற்கலாம். வீட்டுக்காரா்களுக்கு உத்தரியம், ரவிக்கை மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

