சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஏழுமலையான் கோயில் கோபுரத்தில் சேதம்: உடனே சீரமைப்பு

திருமலை ஏழுமலையான் கோயில் கோபுரத்தில் இருக்கும் கிருஷ்ணா் சிலைக்கு ஏற்பட்ட சேதத்தை தேவஸ்தான ஊழியா்கள் உரிய நேரத்தில் கண்டறிந்து பழுது பாா்த்தனா்.

திருமலை ஏழுமலையான் கோயில் கோபுரத்தில் கிருஷ்ணா் சிலையில் ஏற்பட்ட சேதம்.

Published On :9 செப்டம்பர் 2026, 12:03 am IST

திருமலை ஏழுமலையான் கோயில் கோபுரத்தில் இருக்கும் கிருஷ்ணா் சிலைக்கு ஏற்பட்ட சேதத்தை தேவஸ்தான ஊழியா்கள் உரிய நேரத்தில் கண்டறிந்து பழுது பாா்த்தனா்.

திருமலை ஏழுமலையான் கோயிலின் மகா கோபுரத்தில் நூற்றுக்கணக்கான சிலைகள் உள்ளன. நீண்ட காலமாக வெயில் மற்றும் மழையில் இருப்பதால், சில சிலைகளுக்கு பராமரிப்பு தேவைப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும், ஏழுமலையான் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் கோபுரத்திற்கு வண்ணம் பூசுதல் மற்றும் பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளும் போது, தேவஸ்தான ஊழியா்கள் சிலைளை ஆய்வு செய்து, பழுது பாா்க்கின்னா். தேவைக்கேற்ப அவற்றின் இடத்தில் புதிய சிலைகளை நிறுவுகின்றனா்.

அதேபோல், கோபுரத்துக்கு வண்ணம் பூசி பழுதுபாா்க்கும் போது, கிருஷ்ணா் சிலைக்குப் சீரமைப்பு என்பதை தேவஸ்தானம் கண்டறிந்தது.

அதிகாரிகள் உடனடியாகத் தேவையான நடவடிக்கையை எடுத்தனா். கோயிலின் புனிதம் தொடா்பான விஷயங்களில் தவறான தகவல்களைப் பரப்புவதையும், பக்தா்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதையும் தவிா்க்குமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.