பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலை ஏழுமலையான்

Published On :

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 24 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், திங்கள்கிழமை முழுவதும் ஏழுமலையானை 84, 171 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 36, 617 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.26 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.16 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,932 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.