
சிகாகோ தினவிழா
செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளை நிர்வாகக் குழுத் தலைவர் எஸ்.பாண்டுரங்கன் தலைமை வகித்தார். செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்று சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் பேசிய பொன்மொழிகளைப் பேசினர். மேலும் விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து வந்தனர். விவேகானந்தர் குறித்த வரலாறு, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் வென்ற மாணவர்களுக்கு நிர்வாகக் குழுத் தலைவர் எஸ்.பாண்டுரங்கன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






