
"விலையில்லாப் பொருள்கள் விநியோகத்துக்கு 96 சதவீத மக்கள் ஆதரவு'
தமிழக அரசு வழங்கும் விலையில்லாப் பொருள்கள் திட்டத்துக்கு தமிழகத்தின் 96 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழக அரசு வழங்கும் விலையில்லாப் பொருள்கள் திட்டத்துக்கு தமிழகத்தின் 96 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார்.
திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் 1,013 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள், மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினிகளை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வழங்கினார்.
இனாம்காரியந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாக்கண்ணு, மக்களவை உறுப்பினர் ஆர்.வனரோஜா, எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச் செல்வன் வரவேற்றார்.
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பங்கேற்று 964 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினார்.
மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் 49 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசியதாவது, அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழகத்தின் 96 சதவீதம் மக்கள் தமிழக அரசு வழங்கும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்தில் ரூ. 2 கோடியே 42 லட்சத்து 160 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்ற முதல்வர் ஜெயலலிதா அயராது பாடுபட்டு வருகிறார் என்றார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராஜ், சிறப்பு செயலாக்கத் திட்ட தனித்துணை ஆட்சியர் ராணி உள்பட அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





