விழுப்புரம்-திருப்பதி ரயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக சனிக்கிழமை திருப்பதி சென்ற ரயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக சனிக்கிழமை திருப்பதி சென்ற ரயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமை என்பதால் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு செல்கின்றனர்.
அதன்படி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு விரைவு ரயில் சென்றது.
இந்த ரயிலில் செல்வதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பயணச் சீட்டு வாங்கி காத்திருந்தனர். ஆனால், திருக்கோயிலூர் ரயில் நிலையத்தில் இருந்தே ரயிலில் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது.
மாலை 6 மணிக்கு வர வேண்டிய ரயில், 6.20 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையம் வந்தடைந்தது.
இந்த ரயிலில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டம் இருந்ததால் திருவண்ணாமலையில் பயணச் சீட்டு வாங்கி காத்திருந்தவர்களால் ரயிலில் ஏற முடியவில்லை.
பலர் முண்டியடித்துக் கொண்டும், தொங்கிக் கொண்டும் சென்றனர். பலர் பயணச் சீட்டுகளை ரத்து செய்துவிட்டு பேருந்துகளில் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

