சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

ஆத்தூர் அருகே மேட்டூர் குடிநீர் குழாய் உடைப்பு: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்

ஆத்தூர் அருகே மேட்டூர் குடிநீர் குழாய் உடைப்பால் வீணாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர் குறித்து...

Mettur drinking water pipe breaks near Athur...

ஆத்தூர் அருகே மேட்டூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் - டிஎன்எஸ்

Updated On :

சேலம்: ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டூர் குடிநீர் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீா் வீணாக வெளியேறி சாலைகளில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்ற வருகிறது.

இந்தநிலையில், தற்காலிக சர்வீஸ் சாலை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டிருந்த போது சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு செல்லும் பிரதான மேட்டூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி சாலைகளில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளிலும் குடிநீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நெடுஞ்சாலையின் கீழே செல்லும் குழாய் உடைவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து இதற்கு நிரந்தர தீர்வு காண நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வடிகால் வாரியம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Mettur drinking water pipe breaks near Athur: Drinking water overflows on roads

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.