குடிநீர் விநியோகக் குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது
மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குக் குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு குறித்து...

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலைக் கடந்து செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தென்னை மரத்தின் உயரத்திற்கு பீறிட்டு வெளியேறும் தண்ணீர் - டிஎன்எஸ்
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குக் குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், நான்கு மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்தோடி, வீணானது.
மேட்டூர் அணையில் இருந்து சேலம் கந்தம்பட்டி பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குக் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில், சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலைக் கடந்து செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தென்னை மரத்தின் உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. அதிகாலை முதல் நான்கு மணி நேரத்திற்கு மேலாக வெளியேறிய குடிநீர், தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்தோடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், குழாய் உடைப்பைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது. மேலும் வாகன ஓட்டிகள் சிலர் தங்கள் கார்களை நிறுத்தி கழுவும் பணியில் ஈடுபட்டனர்.
பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானதால் அந்த பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
Burst in drinking water supply pipeline: Hundreds of thousands of litres of water wasted
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


