
மரத்தில் தூக்குப் போட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு
செய்யாறு அருகே வேப்ப மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
செய்யாறு அருகே வேப்ப மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
செய்யாறை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார் (29). இவர், மாங்கால் சிப்காட்டில் உள்ள தனியார் காலனி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததாராம்.
வழக்கம்போல், புதன்கிழமை வேலைக்குச் சென்ற விஜய்குமார் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இந்நிலையில், கல்லேரி கிராமம் அருகே விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த தூசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விஜய்குமார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




