சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாள் விழா

செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு நல்லாசிரியர் அன்பழகன் தலைமை வகித்தார்.
 சாரணஆசிரியர் பாலக்குமார்  வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார் கலந்து கொண்டு பேரணியை தொடக்கி வைத்தார்.
பேரணியில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு மேல்வணக்கம்பாடி கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.
பின்னர், பள்ளி வளாகத்தை பேரணி வந்தடைந்ததைத் தொடர்ந்து, அங்கு மாணவர்கள்,  ஆசிரியர்கள் அனைவரும் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com