பெண் தூக்கிட்டு சாவு: தந்தை புகார்

வந்தவாசி அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Updated on
1 min read

வந்தவாசி அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அலமேலுவுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அலமேலு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அலமேலுவின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், தனது மகள் அலமேலுவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கணேசன் வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com