நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்: இளைஞர் கைது
கலசப்பாக்கம் அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.


கலசப்பாக்கம் அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
கலசப்பாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கடலாடி காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (30) என்பவரது நிலத்தில் ஆய்வு செய்தனர்.
அங்கு உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், செல்வத்தை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...