எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

903 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் வழங்கினார்

செய்யாறில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 903 மாணவர்களுக்கு ரூ.1.11 கோடியிலான விலையில்லா மடிக்கணினிகளை இந்து

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:22 am

DIN

செய்யாறில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 903 மாணவர்களுக்கு ரூ.1.11 கோடியிலான விலையில்லா மடிக்கணினிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினார்.
செய்யாறில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலர் வி.ராஜசேகரன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, 903 மாணவ, மாணவிகளுக்கு ரூ1.11 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மின் விளக்குகளை சீரமைக்க நிதியுதவி: செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, விழா நடைபெற்ற இடத்தில் சில குழல் விளக்குகள் (டியூப் லைட்டுகள்) எரியாமல் இருந்ததால் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து, குழல் விளக்குகளை சீரமைக்க அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 ஆயிரத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கரலிங்கத்திடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் பெ.கிருபானந்தம், வட்டாட்சியர் மகேந்திரமணி, தலைமை ஆசிரியர்கள் பெண்கள் பள்ளி உமாமகேஸ்வரி, ஆண்கள் பள்ளி என்.ஆர்.சங்கரலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்
எஸ்.ரவிச்சந்திரன், பி.லோகநாதன், செய்யாறு கூட்டுறவு பால் வழங்கும் சங்கத் தலைவர் அ.அருணகிரி, அதிமுக மாணவரணி
எம்.மகேந்திரன், அவைத்தலைவர் டி.பி.துரை, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் எஸ்.திருமூலன், முன்னாள் சேர்மன் பொன்.அருளானந்தன், வழக்குரைஞரணி முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.