பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சிகள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சிகள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில், கடந்தாண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ஆம் தேதியை கருப்பு தினமாகக் கடைப்பிடித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை கோட் டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம், தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி எ.வ.வேலு எம்எல்ஏ பேசினார்.
இதில், மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், அ.ராஜேந்திரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அ.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, அனைத்து அமைப்புசாரா தொழில் சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வந்தவாசி வட்டக்குழு சார்பில், கருப்பு தின போராட்டம் வந்தவாசி தேரடி அஞ்சல் அலுவலகம் முன் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
போராட்டத்துக்கு வட்டச் செயலர் ஆர்.சீனுகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கு.ஜோதி, மாநிலக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் என்.கிருஷ்ணவேணி, எம்.கோவிந்தசாமி, என்.பக்தவச்சலம், பி.நம்பிராஜன், டி.எம்.ரசூல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் சார்பில்...: ஆரணி அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் சார்பில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பியுமான எம்.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரியை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாபாபு, அசோக்குமார், ஜி.முனிரத்தினம், ஜெயசீலன், அ.பழனி, மாவட்ட துணைத் தலைவர் அருணகிரி, மாவட்டப் பொருளாளர் எஸ்.பிரசாத், வட்டாரத் தலைவர்கள் இராமலிங்கம், இராஜேந்திரன், ஏழுமலை, கார்த்திகேயன், நகரத் தலைவர்கள் டி.ஜெயவேல், யூனிஸ்கான், சந்துரு, பட்டதாரி அணி மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டத் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை வகித்தார். நகரத் தலைவர் என்.வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் பி.சண்முகம் வரவேற்றார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.புருஷோத்தமன், செந்தமிழரசு, குமார், மோகன், காமராஜ், அன்பு, வினோதினி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினர்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: தொடர்ந்து, மாலை 7 மணிக்கு திருவண்ணாமலை காந்தி சிலை எதிரே பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இறந்த பொதுமக்கள், விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தெற்கு மாவட்டத் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதில், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர்கள் சீனிவாசன், மணி, அண்ணாச்சி, ராஜா, அணித் தலைவர்கள் குணசேகரன், ஷாஜஹான், ஐயாயிரம், வட்டாரத் தலைவர்கள் சுப்பிரமணி, ரங்கநாதன், சொக்கநாதன், அண்ணாமலை, ரகோத்தமன், குமார் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...