வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு புதன்கிழமை பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:22 am

DIN

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு புதன்கிழமை பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.
செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்கள், தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு பரிசு, சான்று வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மகரிஷி கல்விக் குழுமத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். நிறுவனர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். செயலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வணிகவரித் துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.மதியழகன் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்கள், தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
அவர் பேசியதாவது: பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள், அரசு பொதுத்தேர்வில் மாவட்ட, மாநில அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் காத்திகேயன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் வெங்கட்ராமன், குமார், சங்கர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.