ஆரணியை அடுத்த களம்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி பரிமாற்ற திட்டத்தின்கீழ், களம்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலசப்பாக்கம் வட்டம், மேல்வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து 20 மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ச.வசந்தா தலைமை வகித்தார். ஆசிரியர் ஜி.ராஜேந்திரன் மாணவிகளளுக்கு இனிப்பு அளித்து வரவேற்றார். இதில் சொற்பொழிவாளர் கணேசன், கதையும், பாடலும் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கருத்துக்களை விளக்கினார். தமிழாசிரியர் மு.தாஸ், கல்வி கற்கும் விதம், ஒழுக்கம், கதை சொல்லுதல், கட்டுரை எழுதி காண்பித்தல், நாடகம் நடித்தல், ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விவரித்தார். இதில், பள்ளி ஆசிரியர்கள் ஆர்.சரவணன், என்.அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.